புத்தாண்டில் பிரிட்டிஷ் விமான ஊழியர்கள் மூவரின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஹீத்ரோ விமான நிலையம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி நண்பர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூவரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த மூவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில், அவர்களது நண்பர்கள் பலர் கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நீ எங்களை விட்டு தொலைவான உயரத்திற்கு சென்று விட்டாய், ஆனால் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டோம்! உயரங்களில் பறந்து சென்று கொண்டே இருங்கள் என நண்பர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

புத்தாண்டுக்கு சில நிமிடங்கள் முன்பு ஹீத்ரோ விமான நிலையம் அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

Facebook

நண்பர்களான ஜோ ஃபின்னிஸ் மற்றும் டொமினிக் ஃபெல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

இவர்களின் தோழியான பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

(Image: UKNIP)

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவுக்கு சற்று முன்பு மெர்சிடிஸ் எச்.ஜி.வி ஒன்று அசுர வேகத்தில் இவர்களின் டொயோட்டா யாரிஸ் காரில் மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நண்பர்கல் நிதி திரட்டி வருகின்றனர். சுமார் 6 மணி நேரத்தில் 36,000 பவுண்டுகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Image: UKNIP)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers