குடும்பத்தில் ஒருவனாக இருந்தான்! என்னை மன்னித்து விடு.. அனாதையாக விடப்பட்ட நிலையில் கண்ணீர் கடிதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது குடும்பத்தில் ஒருவனாக ஆசையாக வளர்ந்த நாயை கைவிட்ட அதன் உரிமையாளர் எழுதி வைத்திருந்த கடிதம் மனதை கலங்கடித்துள்ளது.

Lancashire கவுண்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நாய் ஒன்று கட்டிவைக்கப்பட்டிருந்ததை அடுத்து அதை உரிமையாளர் கைவிட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் வில் லேம்பிங் என்ற அதிகாரி அங்கு வந்து நாயை ஆய்வு செய்தார்.

அப்போது அதன் மீது ஒரு கடிதம் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது.

அந்த கடிதத்தில், என் நாய் தான் எனக்கு உலகமாகவும், குடும்பத்தில் ஒருவனாகவும் இருந்தது, ஆனால் இப்போது என்னிடம் வீடும் இல்லை, பணமும் இல்லை.

என் வாழ்க்கை திசை மாறிவிட்டது, என்னுடய நாய் சாலையில் குளிரில் பட்டினியோடு இருப்பதை காண நான் விரும்பவில்லை.

என் நாய் மிகவும் அன்பானதாகவும், தோழமை குணம் கொண்டவனாகவும் இருக்கும்.

கலங்கிய மனதோடு அவனை விட்டு செல்கிறேன், ஐ லவ் யூ, என்னை மன்னித்து விடு என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து வில் கூறுகையில், நாயின் உரிமையாளர் அதன் மீது எந்தளவுக்கு அன்பு வைத்துள்ளார் என்பதை உணர முடிகிறது.

இந்த நாய்க்கு கிராக்கர் என செல்ல பெயர் வைத்துள்ளோம். நிச்சயம் கிராக்கர் வாழ்வதற்கு அழகான வீடு விரைவில் அமையும் என நம்புகிறேன் என கூறினார்.

தற்போது கிராக்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers