பிரத்தானியாவில் பொதுத் தேர்தலுக்கு பிறகு கண்டிப்பாக இது நடந்தே தீரும்... பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி

Report Print Basu in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, இரண்டு வார காலத்திற்குள் தேர்தலில் தனது கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை வென்றால், ஜனவரி 31ம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்.

பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை நாங்கள் பெற முடிந்தால், ஜனவரி 31ம் திகதிக்குள் பிரெக்ஸிட் மசோதாவை முழுமையாக நிறைவேற்றுவோம்.

2020ம் ஆண்டின் இறுதிக்கு அப்பால் பிரெக்ஸிட்டுக்குப் பிறகு மாறுதல் காலத்தை பிரித்தானியா நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் மீண்டும் கூறினார்.

அவர் பிரதமராக இருப்பாரா அல்லது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமா என்று கேட்டதற்கு, ‘நான் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்ற விரும்புகிறேன். அதை நான் உறுதியாக சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்