லண்டன் பெண்ணுக்கு தவறுதலாக கிடைத்த கோடிக்கணக்கான பணம்! ஏற்பட்ட ஆசை.. இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த கோடீஸ்வரரின் கோடிக்கணக்கான பணம் தவறுதலாக அவரின் காதலிக்கு சென்ற நிலையில் அதை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் ரைனர் கையர்மென் (70) என்ற கோடீஸ்வரருக்கு முதல் மனைவி கிரிஸ்டினி மூலம் அலைஸ் மற்றும் லூசி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கிரிஸ்டினியை பிரிந்த ரைனருக்கு ஹிலாரி ஹாரிசன் மோர்கன் என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மேக்ஸ், பிரட் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இந்நிலையில் ரைனர் கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து ரைனரின் £4.4 மில்லியன் பணம் அவர் பிள்ளைகளுக்கு பிரித்து தரப்படவிருந்த நிலையில் அதில் பாதியான £2.2 மில்லியன் பணம் தவறுதலாக ஹிலாரிக்கு சென்றது.

ஆனால் இதை நான்கு பிள்ளைகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என ரைனரின் மூத்த மகள் அலைஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் தன்னால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாது எனவும், அது தனக்கே சொந்தம் எனவும் ஹிலாரி தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, ஹிலாரி அந்த பணத்தை உரிமை கொண்டாட முடியாது, அது சட்டப்படி ரைனரின் வாரிசுகளுக்கு தான் சேரும், அதை அவர் திருப்பி கொடுக்க வேண்டும், இதோடு நீதிமன்ற சட்ட செலவுக்கு £500,000-ஐ சேர்த்து கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஹிலாரி கூறுகையில், எந்த தீர்ப்பு எனக்கு திருப்தியளிக்கவில்லை, இதை எதிர்ப்பு மேல்முறையீடு செய்யவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்