இந்திய வம்சாவளிப் பெண்ணை பலி வாங்கிய அம்பு: வயிற்றில் இருந்த குழந்தை தப்பியது எப்படி?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய வம்சாவளிப்பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் அம்பெய்து கொன்ற வழக்கில் அவர் உயிரிழந்து, அவரது கருவிலிருந்த குழந்தை தப்பியது எப்படி என்பது படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

Ramanodge Unmathallegadoo (51), தன்னை விட்டு பிரிந்து வேறொருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் வாழ்ந்து வந்த தனது முன்னாள் மனைவியையும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையையும் பழிவாங்குவதற்காக காத்திருந்தார்.

Devi Muhammad (35)இன் வீட்டின் பின் வில் அம்புடன் பதுங்கியிருந்த அவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

கையில் ஆயுதத்துடன் ஒருவர் நுழைவதைக் கண்ட Deviயின் இந்நாள் கணவரான Muhammad எச்சரிக்க, Devi தப்பித்து மாடிக்கு செல்வதற்காக படியேறும்போது அவர்மீது அம்பெய்துள்ளார் Ramanodge.

எட்டு மாத கர்ப்பிணியான Deviயின் வயிற்றில் கீழிருந்து Ramanodge எய்த அந்த அம்பு பாய்ந்துள்ளது.

Deviயின் வயிற்றுக்குள் 14 இஞ்ச் ஆழத்திற்கு நுழைந்த அந்த அம்பு, வயிறு வழியாக சென்று அவரது இதயத்திற்குள் நுழைந்துள்ளது.

வயிற்றில் குழந்தை இருப்பதை அறிந்தும் Ramanodge எய்த அந்த அம்பு, 14 இஞ்ச்கள் Deviயின் வயிற்றுக்குள் சென்று அவரது குடல், வயிறு, கல்லீரல் மற்றும் இதயத்தை துளைத்தும், அந்த குழந்தை மீது படாமல் சென்றுள்ளது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Deviயின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க, அவர்களால் Deviயை காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருக்கிறது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்