லண்டன் பெண்ணை கூகுளில் அதிகம் தேடிய இணையவாசிகள்! ஒரே அறிவிப்பால் பிரபலமான இவர் யார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த நடிகை ஒலிவியா மோரிஸை ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் இணையவாசிகள் அதிகம் தேடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மதாராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். பிரபல மொடலான இவர் அதன் பின் ரஜினி, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

அதன் பின் தன்னுடைய காதலனை கரம் பிடித்த இவர், லண்டனிலே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வருகின்றனர். ஆங்கிலேயர் கால பின்னணியில் சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக நடிக்கின்றனர்.

ஆனால் இப்படத்தின் கதாநாயகி யார் என்று கூறாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராஜமெளலி இப்படத்தில் லண்டனை சேர்ந்த ஒலிவியா மோரிஸ் என்கிற தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிக்கிறார் என்கிற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து அன்றைய தினம் இந்தியா முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் வரிசையில் ஒலிவியா மோரிஸ் இரண்டாவது இடம் பிடித்தார்.

ஆங்கிலேயே இளவரசியாக நடிப்பதற்காகவே லண்டனைச் சேர்ந்த இவர் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே நடித்திருந்த 7 ட்ரையல் 7 டேய்ஸ் என்கிற தொடரில் இவரது நடிப்பை கண்டு வியந்து போய், அதன்பிறகே இவரை இந்த படத்தில் ராஜமவுலி கமிட் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்