பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: வெளியான ஜெரமி கார்பினின் சுயரூபம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் விவாதங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

நேற்று மக்கள் முன்னிலையில் பிரதமர் வேட்பாளர்கள் விவாதங்களில் ஈடுபட்ட நிலையில், மக்கள் சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுக்க, தான் அளித்த பதிலால் மக்களின் ஏமாற்றத்தை வெளிப்படையாகவே சம்பாதித்துக்கொண்டார் லேபர் கட்சியின் ஜெரமி கார்பின்.

பிரெக்சிட் குறித்த தனது நிலைப்பாடு குறித்து கூறிய கார்பின், தான் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவதை விரும்புகிறேனா, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறேனா என்பதை கடைசி வரை மக்களிடம் தெரிவிக்கவே மாட்டேன் என்று கூற மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அவரது பதிலைக் கேட்ட மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் BOO என குரல் எழுப்பினர்.

கடுமையாக கேள்விக்கணைகளால் கார்பினைத் துளைத்தெடுத்த மக்கள், திரு கார்பின் அவர்களே, நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவதை விரும்புகிறீர்களா, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்களா என்பதை மக்களிடம் தெரிவிக்கவே மாட்டீர்கள் என்றால், நாங்கள் ஏன் லேபர் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்ற கேள்விக்கு நேரடியான விளக்கத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.

தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்பதை வாக்காளர்களை ஒப்புக்கொள்ளச் செய்ய கார்பின் திணறினார் என்றே பிரபல பிரித்தானிய பத்திரிகைகள் எழுதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்