இலங்கை பழங்குடியின மக்களுக்கு பிரித்தானியா அளித்த பொக்கிஷம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் எடின்பர்க் பல்கலைக்கழகமானது இலங்கையின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களின் மண்டை ஓடுகளை அவர்களின் சந்ததியினருக்கு கைமாறியுள்ளது.

குறித்த மண்டை ஓடுகளானது சுமார் 200 ஆண்டுகள் பழமையானது எனவும் Vedda இன மக்களில் மண்டை ஓடுகள் அவை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடுகளை எடின்பர்க் பல்கலைக்கழகமானது இதுவரை பாதுகாத்து வந்துள்ளது.

Vedda இன மக்களில் தற்போது முக்கியஸ்தராக உள்ள Wanniya Uruwarige என்பவரை பிரித்தானியாவுக்கு அழைத்து, விழா ஒன்றை ஏற்பாடு செய்து அதன்மூலம் மண்டை ஓடுகளை கைமாறியுள்ளனர்.

Vedda இன மக்களில் முக்கியஸ்தர்களின் மண்டை ஓடுகளே இவை எனவும், ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில் விழா எடுத்து இவர்களை நினைவு கூர்வதாக Wanniya Uruwarige தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

இவர்களின் மண்டை ஓடுகளை எடின்பர்க் பல்கலைக்கழகமானது பாதுகாத்து வந்தாலும், உண்மையில் இவர்களின் ஆவியானது எங்களுடன் இலங்கையில் உள்ளது என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த தருணமானது Vedda இன மக்களுக்கு மிகவும் முக்கியமானது என கூறும் அவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

குறித்த 9 மண்டை ஓடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனி ஆய்வாளர்கள் இவை இலங்கையை சேர்ந்த Vedda இன மக்களுடையது என உறுதி செய்துள்ளனர்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த Vedda இன மக்கள். முக்கிய 5 துணைப்பிரிவுகளாக வாழ்ந்துவரும் இவர்கள் தற்போது இன அழிவை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டுமின்றி காலாகாலமாக பேசிப் புழங்கிவந்த தங்களின் மொழியை கூட மறந்து, தற்போது சிங்களம் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pic: DAVID CHESKIN

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்