பிரித்தானியாவில் 92 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 17 மணி நேரம் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், 92 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இன்று(சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி முதல் நாளை ஞாயிற்றுக் கிழமை வரை அதாவது சுமார் 17 மணி நேரம் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் நிறுவனம் 92 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மிட்லேண்ட்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் சனிக்கிழமை பிற்பகலுக்கு பின் தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்ய கூடும், இதன் காரணமாக கடற்கரைகளில் பெரிய அலைகள் எழ வாய்ப்புண்டு, இதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் மின்சாரம் தடைபடலாம் மற்றும் போக்குவரத்து தாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வார இறுதியில் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலும், தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் திங்கட்கிழமை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் வார இறுதி சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், தங்கள் சுற்றுப்பயண பாதுகாப்பானதா என்பதை யோசித்து, ஆலோசனை பெற்று செல்லும் படி சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் மூடுபனி திட்டுகள் இருக்கலாம். ஏற்கனவே மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக தெற்கு யார்ஷயர் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 655 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி 1,300 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அங்கும் வார இறுதியில் மழை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து நகரின் சவுத் வெஸ்ட், ஈஸ்ட் மிட்லேன்ட்ஸ் மற்றும் ஸ்காட்டிஸ் முக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்