பிரித்தானியா பொதுத்தேர்தல்: நாங்கள் வெற்றி பெற்றால் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்போம்! தொழிலாளர் கட்சி

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியாவில் டிசம்பர் 12ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் இந்தியாவிடம் மன்னிப்பு கோரப்படும் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அடுத்த மாதம் 12ஆம் திகதி பொது தேர்தல் நடக்க உள்ளது.

இதனை அடுத்து எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி 107 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உண்மையான மாற்றங்களுக்கான காலம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக

  • கடந்த காலங்களில் பிரித்தானியா இழைத்ததாகக் கூறப்படும் அநீதிகள் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்.
  • இந்தியாவில் 100ஆண்டுகள் முன்னால் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்கப்படும்.
  • மேலும், அமிருதசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் புளூ ஸ்டாா்’ நடவடிக்கையில் பிரித்தானியாவின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்து இந்திய வம்சாவளி பிரித்தானிய வாக்காளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தொழிலாளா் கட்சியினா் பேசி வருவது, இந்திய வம்சாவளியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொழிலாளா் கட்சியின் தோ்தல் அறிக்கையில் இந்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்