3 மாதங்களாக சொந்த பிள்ளையென பாலூட்டிய பிரித்தானிய தாயார்: டி.என்.ஏ சோதனையில் தெரியவந்த உண்மை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

வெளிநாட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பிரித்தானிய தாயார் ஒருவர் தமது சொந்த பிள்ளையை 3 மாதங்கள் பிரிந்திருந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

எல் சால்வடோர் நாட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்களது 18 வயது மகனுடம் பணியாற்றி வந்துள்ளனர் பிரித்தானிய தம்பதிகளான மெர்சி மற்றும் ரிச்சர்ட்.

தமது இரண்டாவது பிள்ளையை கருவுற்றிருந்த மெர்சி, 35-வது வாரத்தில் பொதுவான மருத்துவ சோதனைக்காக மருத்துமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது வேலை நிமித்தமாக ரிச்சர்ட் அமெரிக்கா சென்றுள்ளார். தமது மூத்த மகன் கெஞ்ஜியுடன் மருத்துவமனை சென்ற மெர்சிக்கு, அன்றே பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஒரு அழகான ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார் மெர்சி. பிரசவத்திற்கு பின்னர் சில நிமிடங்கள் தமது பிள்ளையை கொஞ்சிவிட்டு, மருத்துவ காரணங்களால் ஆழ்ந்த மயக்கத்தில் சென்றுள்ளார் மெர்சி.

ஆனால் அடுத்த நாள் பொது அறைக்கு மாற்றப்பட்டிருந்த மெரிசியுடன் இருந்த குழந்தையை பார்த்து அவர் சந்தேகம் கொண்டுள்ளார்.

முந்தைய நாள் இரவு பார்த்த பிள்ளைக்கும் தற்போது தம்மிடம் அளிக்கப்பட்டிருக்கும் பிள்ளைக்கும் வித்தியாசம் இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார்.

இதை மருத்துவர்களிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கல் உறுதியாக அது உங்கள் பிள்ளை தான் என நம்ப வைத்துள்ளனர்.

குழந்தை தாயாருடன் எந்த ஒட்டுதலும் இன்றி இருந்துள்ளதே மெர்சியின் சந்தேகம் வலுக்க காரணமாக அமைந்துள்ளது.

இருப்பினும், மருத்துவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பிள்ளைக்கு பாலூட்டி வளர்த்து வந்துள்ளார்.

இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில், தம்மிடம் இருக்கும் பிள்ளையை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தியுள்ளார் மெர்சி.

அதில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து பிள்ளை பிறந்த மருத்துவமனை மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளனர் மெர்சி மற்றும் ரிச்சர்ட் தம்பதியினர்.

2015 ஆம் ஆண்டு நடந்த இந்த விவகாரம் அப்போது சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் எல் சால்வடோர் மாவட்ட நீதிமன்றத்தின் தீவிர நடவ்டிக்கைக்கு பின்னர் மெர்சியின் உண்மையான குழந்தையை மீட்டு கையளித்துள்ளனர்.

அந்த தருணம் தம்மால் மறக்க முடியாது என கூறும் மெர்சி, மூன்று மாத காலமாக தம்மை தாயாரென்று கருதியிருந்த பிள்ளையை பார்க்க தமக்கு பாவமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்