வயிற்று வலியால் துடித்த 22 வயது இளம்பெண்... மருத்துவர்கள் எடுத்த ஸ்கேனில் காத்திருந்த எதிர்பாராத ஆச்சரியம்!

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கருத்தடை ஊசியை தொடர்ந்து தனக்கு செலுத்தி கொண்ட நிலையிலும் கர்ப்பமான இளம்பெண் அதை உணராத நிலையில் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரை சேர்ந்தவர் Stephanie (22). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதையடுத்து அடுத்த குழந்தை தற்போதைக்கு வேண்டாமென முடிவெடுத்த அவர் சில மாதங்களாக தொடர்ந்து கருத்தடை ஊசி போட்டு வந்தார்.

இந்நிலையில் சில வாரங்களாக Stephanieக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது.

Credit: Bauer Media

ஆனால் அது சாதாரண வயிற்று வலியாக இருக்கும் என எண்ணிய அவர் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி Stephanie-க்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு Stephanie-ஐ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பமாக உள்ளதாகவும் இன்று அல்லது நாளை குழந்தை பிறக்கும் என கூறினர்.

இதை கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர அடைந்த Stephanie தான் கர்ப்பமாக இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை என கூறினார்.

Credit: Bauer Media

இந்நிலையில் நவம்பர் 1ஆம் திகதி அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் இந்த விடயம் தற்போது தான் வெளியில் தெரிந்துள்ளது.

இது குறித்து Stephanie கூறுகையில், எனக்கு தெரிந்து குறைந்தது 9 மாதங்களாக கருத்தடை ஊசி போட்டு வருகிறேன், ஆனால் அதையும் மீறி கர்ப்பமானது ஆச்சரியம் தருகிறது.

மேலும் என் வயிறு பெரிதாகவில்லை மற்றும் கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் எனக்கு ஏற்படவில்லை.

வயிற்று வலி என மருத்துவரிடம் போன போது ஸ்கேன் பரிசோதனை மூலம் நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.

இதை கேட்டு நான் சிலை போல ஒரு நிமிடம் திகைத்து நின்றேன். பின்னர் நல்லபடியாக குழந்தை பிறந்தது, குழந்தைக்கு Sapphire என பெயர் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

Credit: Bauer Media

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்