லண்டனில் கைது செய்யப்பட்ட 10 இந்தியர்கள்: பெயர்கள் வெளியானது!

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில், 5இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாடுவாழ் இந்தியார்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 5 இந்தியர்களும் 5வெளிநாடு வாழ் இந்தியர்களும் போதைப்பொருட்கள் கடத்தல் அமைப்பு ரீதியிலான குடியேற்ற குற்றம் ஆகியவற்றின் மூலம் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதை அடுத்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 10பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சரண்சிங், வல்ஜீத்சிங், ஜஸ்பீர் சி டால், சுந்தர் வெங்கடாச்சலம், ஜாஸ்பீர் சிங் மல்கோத்ரா, மன்மோகன் சிங் கபூர், பிங்கி கபூர் உள்ளிட்டோர் ஆவர்.

இவர்களுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பேரும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்