பிரித்தானியாவை உலுக்கிய கர்ப்பிணி கொல்லப்பட்ட வழக்கில்.. முன்னாள் கணவர் குற்றவாளி என நிரூபனம்: திடுக்கிடும் தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 2018ம் ஆண்டு நிறைமாத கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை கண்டறிந்துள்ளது.

2018 நவம்பர் மாதம் 12ம் திகதி 35 வயதான சானா முகமது கிழக்கு லண்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். அப்போது, சானா 8 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, வீட்டின் கொட்டகையில் இரண்டு வில் அம்புடன் மறைந்திருந்த 51 வயதான ராமனோட்ஜ் அன்மதலேகடூவை சானாவின் கணவர் இம்தியாஸ் கண்டுபிடித்துள்ளார்.

சானாவின் முன்னாள் கணவரான ராமனோட்ஜ், வில் அம்பு ஆயுதத்தால் சானாவை தாக்கிவிட்டு வீட்டின் கொட்டகையில் மறைந்துள்ளார். மறைந்திருந்து ராமனோட்ஜை அவரது மகனே பிடித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளார்.

அம்பால் தாக்கப்பட்ட சானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பு வயிற்றில் இருந்த குழந்தையை தாக்காத நிலையில் நல்லபடியாக பிரசவமாகியுள்ளது. எனினும், குழந்தை நலமாக இருந்த போதிலும் காயமடைந்த சானா உயிரிழந்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில், ராமனோட்ஜ் பல மாதங்களாக சானாவை கொல்ல திட்டமிட்டு வந்தது அம்பலமானது. அவர் 1000 பவுண்டுகளுக்கு வில் அம்பை இணையதளத்தில் வங்கியது தெரியவந்தது.

euronews

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சானாவின் முன்னாள் கணவர் ராமனோட்ஜ் தான் குற்றவாளி என கண்டறிந்துள்ளது. மேலும், எதிர்வரும் 29ம் திகதி அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ராமனோட்ஜின் கொலை வெறியால் அவருக்கும்-சானாவுக்கு பிறந்த குழந்தைகள் உட்பட 6 குழந்தைகள் தற்போது தாய் இல்லாமல் அனாதையாகியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்