இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று முடிவு செய்த மருத்துவர்கள்: குழந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இனி பிழைக்க வாய்ப்பில்லை, என முடிவு செய்து செயற்கை சுவாசத்தை நிறுத்த மருத்துவர்கள் முடிவு செய்த நேரத்தில் கண் திறந்து பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தான் ஒரு குட்டிப்பையன்.

சுய நினைவில்லாமலும் உடல் நீலம்பாரித்தும் பிறந்தான் குட்டிப்பையன் Oscar Bedford.

இன்குபேட்டரில் வைக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, கடைசியில் நம்பிக்கை இழந்த மருத்துவர்கள், குழந்தையை பெற்றோரின் கையில் கொடுத்து, சற்று நேரம் அவனுடன் தனிமையில் செலவிட்டபின் அவனுக்கு குட்பை சொல்ல வேண்டியதுதான், என தனியறைக்கு அனுப்பிவைத்தார்கள்.

Oscarஇன் பெற்றோரான Greg மற்றும் Chelseaவிடம், உங்கள் மகன் இன்னும் சில நிமிடங்கள் அல்லது விநாடிகள் மட்டுமே உயிர் வாழ்வான் என்று கூறியிருந்தார்கள் மருத்துவர்கள்.

Chelsea (26), தனது தாயை அழைத்து, கடைசியாக ஒரு முறை உங்கள் பேரனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறலாம் என்று, தனது தாய் Sally-Annஐ வீடியோ அழைப்பில் அழைக்க முயன்றார்.

அழைப்பிலிருக்கும்போதே, அம்மாவின் மார்பில் சாய்ந்திருந்த Oscar, திடீரென கண்களைத் திறந்தான், வீல் என கத்த ஆரம்பித்தான்.

முதல் முறை அவன் கண்களைத் திறந்ததும், கட்டிலில் உட்கார்ந்து சினிமாவில் வருவதுபோல, என் தலையை குலுக்கிக் கொண்டேன், இது நிஜமா அல்லது கனவா என்று, என்கிறார் Chelsea.

தற்போது 18 மாதங்களாகும் Oscarக்கு தங்கை ஒருத்தி சீக்கிரம் பிறக்க இருக்கும் நிலையில், அவளை வரவேற்பதற்காகவும் மகனுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காகவும் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் அவனது பெற்றோர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்