இந்திய வம்சாவளி பெண் கொலை வழக்கு: ஏற்கனவே இருமுறை ஆயுதங்களை கண்டெடுத்த பெண் சாட்சியம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் இந்திய வம்சாவளியினரான கர்ப்பிணிப்பெண் Devi Unmathallegadooவை இதயத்தில் அம்பெய்து கொலை செய்த வழக்கில், அவரது முன்னாள் கணவர் Ramanodge (51) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கில் சாட்சியமளித்த எதிர் வீட்டுக்காரரான Jennifer Chalmers என்ற பெண், ஏற்கனவே தான் இருமுறை சந்தேகத்துக்குரிய விதத்தில் ஆயுதங்களைக் கண்டெடுத்ததாகவும், பொலிசாருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தான் புற்களை வெட்டி சமன்படுத்திக்கொண்டிருக்கும்போது, குப்பை போடும் கவர்களில் பைனாகுலர்கள், புதிதாக செய்யப்பட்ட சாவிகள் ஆகியவற்றைக் கண்டெடுத்தகாவும்,

பின்னர் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், வில் அம்புகள், கத்தி, சில நகைகள் ஆகியவற்றைக் கண்டெடுத்ததாகவும், அப்போது அவற்றை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பொலிசாருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதை பார்க்கும்போது, கொள்ளையடிப்போர் பயன்படுத்தும் burglary kit போல இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Devi கொலை வழக்கில், தொடர்ந்து புதிது புதிதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில், Deviயைக் கொலை செய்வதற்கு பல மாதங்கள் முன்பே, திட்டமிட்டு அவரது முன்னாள் கணவர் Ramanodge, Deviயின் வீட்டின் பின்னால் இருக்கும் ஷெட் ஒன்றிற்குள் மறைந்திருந்ததாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்