காலுடன் பரிமாறப்பட்ட நக்கட்ஸ்.. மீண்டும் சிக்கியது பிரித்தானியாவில் உள்ள உலகளவில் பிரபலமான உணவகம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள உலகளவில் பிரபலமான உணவகத்தின் உணவில் கோழிக்கால் இருந்து சம்பவம் மீண்டும் சர்ச்சகையை ஏற்படுத்தியுள்ளது.

Surrey, Redhill-ல் பகுதியில் உள்ள மெக்டொனால்டு கிளையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று 27 வயதான Laura-Jane Popsey தனது 6 வயது மகள் Lily-யுடன் குறித்த மெக்டொனால்டு உணவகத்தின் கிளைக்கு சென்றுள்ளார்.

மகள் முடிந்த மகள் பசியுடன் இருந்ததால் விரைவாக கிடக்ககூடிய வகையில் சிக்கன் நக்கட்ஸ் ஆர்டர் செய்து வீட்டிற்கு வாங்கிச்சென்று்ளளார். வீட்டிற்கு சென்ற பின் Lily சுலபமாக சாப்பிட சிக்கன் நக்கட்ஸை புட்டு கொடுத்துள்ளார் Popsey.

அப்போது, நக்கட்ஸிக்குள் கோழியின் கால் இருப்பதை கண்டு Popsey அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த உணவை குப்பையில் வீசியுள்ளார்.

இனி ஒருபோதும் மெக்டொனால்டு உணவகத்திற்கு செல்லமாட்டேன் என கூறிய Popsey, மேலும், அதை புகைப்படம் எடுத்து மெக்டொனால்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

நக்கட்ஸில் கோழியின் மேல் பகுதியில் உள்ள இறைச்சி மட்டுமே பயன்படுத்தப்படும், கோழிக்கால் என்று வாடிக்கையாளர் Popsey கண்டுபிடிக்கப்பட்டது இரத்த நாளங்களாக இருந்திருக்கும் என விளக்கமளித்துள்ளது.

எனினும், Popsey-விடம் மன்னிப்பு கோரி ஊழியர், இதுதொடர்பில் விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார். முன்பு, இதுபோன்று பலமுறை மெக்டொனால்டு உணவு மீது வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது நினைவுக்கூரதக்கது.

dailystar

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்