பிரித்தானியாவில் அதிர்ச்சி.... லொரி கண்டெய்னரில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் லொரி கண்டெய்னரில் 39 சடலங்களை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், லொரியின் டிரைவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் Essex நகரின் Greys பகுதியில் அமைந்திருக்கும் Waterglade Industrial Park அருகே உள்ளூர் நேரப்படி பொலிசார் காலை 1.40 மணிக்கு லொரி கண்டெய்னர் ஒன்றை நடத்திய சோதனையில், லொரியில் 39 சடல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

(Picture: Sky News)

அதன் பின் இது குறித்து உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த ஆம்புலன்சில் உடல்கள் ஏற்றப்பட்டு அனுப்பபட்ட நிலையில், லொரியை ஓட்டி வந்த 25 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த டிரைவர் அயர்லாந்தின் வடக்கு பகுதியை சேர்ந்தவர் என்றும், லொரி பல்கேரியாவிலிருந்து Holyhead மற்றும் Anglesey வழியாக பிரித்தானியாவிற்கு நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் யார் யார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை, இதற்கு ஒரு நீண்ட விசாரணை தேவைப்படும். அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டுள்ள டிரைவருக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா? என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி Supt Andrew Mariner தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், இது அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பான தகவல்களை கேட்டு கொண்டே இருக்கிறேன். விரைவில் இறந்தவர்கள் பற்றிய தகவல் தெரியவரும் என்று கூறியுள்ளார்.

(Picture: PA)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்