பிரித்தானியாவை கலங்க வைத்த சம்பவம்.. லண்டனில் இருந்து சவுதிக்கு தப்பி ஓடிய குற்றவாளி தம்பதி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தையை கொல்லும் நோக்கத்துடன் தொடர்ந்து தவறான மருத்து செலுத்தி வந்த பெண், தண்டனையிலிருந்து தப்பிக்க சவுதி அரேபியாவுக்கு தப்பி ஓடியுள்ளார்.

Evelina குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் குழந்தைக்கு மருந்து கொடுத்த குற்றச்சாட்டில் 29 வயதான அமல் ஆசிரி என்ற பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

ஆசிரி மற்றும் அவரது கணவர் முகமது ஆசிரி, 38, கடைசியாக செப்டம்பர் 27 அன்று சவுதி அரேபிய தூதரகத்தில் ஊழியர்களால் காணப்பட்டனர், மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறிவிட்டனர்.

பொலிஸ் அதிகாரிகள் தென்மேற்கு லண்டனின் கென்சிங்டனில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, குப்தைப தொட்டியில் உலகளாவிய பயண விவரப்பட்டியலை கண்டுபிடித்துள்ளனர்.

சவுதி அரேபிய தூதரகத்தை தொடர்பு கொண்ட போது, அவர்கள் பயணிக்க எந்த விண்ணப்பமும் செய்யவில்லை என்று அதிகாரிகள் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 23 அன்று பதிவான சிசிடிவியில். ஆசிரி நான்கு சூட்கேஸ்களை அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து எடுத்துச் சென்று குளோபல் டிராவல் முன்பதிவு செய்த கூரியரிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது..

நீதிபதி Mark Lucraft, செப்டம்பர் 30 அன்று அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வழக்கு முடிவடையும் வரை தம்பதியினர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து எந்த விவரங்களையும் வெளியிட தடை விதித்த நீதிபதி, எனது தீர்ப்பில், அவர்கள் தங்கள் உடமைகளை சவுதி அரேபியாவுக்கு திருப்பித் தர வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர்கள் தங்கள் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டாம் என்ற தெளிவான முடிவை எடுத்துள்ளனர், அதனால் தான் எங்காவது செல்ல தெளிவான பார்வையுடன் செய்யப்பட்டிருக்க வேண்டும் .

அமல் ஆசிரி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார், அவரது கணவர் முகமது குழந்தை கொடுமை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், தண்டனையை நவம்பர் 4ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஆனால், இந்த ஜோடி மீண்டும் இங்கிலாந்தில் கால் பதிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்