இளவரசர் ஹரியால் அதிர்ச்சியில் பிரித்தானியா ராணி.. கவலையில் அரச குடும்பம்: வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

இளவரசர் ஹரி-மேகன் தம்பதியால் பிரித்தானியா ராணி அதிர்ச்சியடைந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இது தொடர்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் இருவரும் பேட்டியளித்தனர்.

அந்த நேர்காணலில் திருமணத்திற்கு பிறகு தான் சந்தோசமாக இல்லை என மேகன் தெரிவித்திருந்தார். மேலும், தனது சகோதரரும் இளவரசருமான வில்லியமும் தானும் வெவ்வேறு பாதையில் செல்வதாக இளவரசர் ஹரி வெளிப்படையாக கூறினார்.

ஐடிவி-யில் ஒளிப்பரப்பான இளவரசர் ஹரி-மேகன் நிகழ்ச்சியால் பிரித்தானியா ராணி மற்றும் பிற அரச குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிப்படையாக சகோதரருடனான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஹரி கூறியுள்ளது அரச குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஹரி- மேகன் ஜோடி குறித்து அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக ஹரியின் பாட்டி ராணி, தம்பதியினர் பத்திரிகைகளுக்கு எதிராக தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை பற்றி மிகவும் கவலைப்படுவதாக கூறப்படுகிறது.

அவர்கள் முற்றிலும் தனித்தனி வழிகளில் செல்கிறார்கள், மேலும் ஹாரி சிரமப்படுவது வெளிப்படையாக தெரிகிறது என அரச குடும்பம் கவலைப்படுவதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்