லண்டனில் முத்தம் கொடுத்து கொண்ட ஓரினச்சேர்க்கையாளர்கள்.. அங்கு வந்த பெண் செய்த மோசமான செயலின் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் பேருந்து நிலையத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களான இரு ஆண்கள் முத்தம் கொடுத்து கொண்ட நிலையில் அங்கு வந்த பெண் அவர்களை மோசமாக திட்டிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

லண்டன் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் காரில் வந்த இரண்டு பெண்கள் பேருந்து நிலையம் அருகில் வந்து தங்கள் வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது அங்கு ஓரினசேர்க்கையாளர்களான இரு ஆண்கள் முத்தம் கொடுத்து கொண்டதை பார்த்த காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் இருவரையும் சகட்டுமேனிக்கு திட்ட தொடங்கினார்.

இது போன்ற செயலை நான்கு சுவற்றுக்குள் வைத்து கொள்வதை விட்டு ஏன் இப்படி பொது இடத்தில் செய்கிறீர்கள் என கேட்டார்.

இதனால் கோபமான ஒரு ஆண், நீ இப்படி சொல்வதை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என கூற அதற்கு அந்த பெண் உங்களை பார்த்தால் என் மகன் மனம் கெடும், அவன் பார்க்காதவாறு நீங்கள் இருங்கள் என கூறி மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

பின்னர் அந்த பெண்கள் வந்த கார் அங்கிருந்து கிளம்பி சென்றது.

இந்த வீடியோவை குறித்த ஓரினசேர்க்கையாளர்களின் நண்பர் ரோஸ் என்பவர் சமூகவலைதளத்தில் வெளியிட அது 188,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 2300 லைக்குகளை அள்ளி வைரலாகியுள்ளது.

இது போன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவோரின் செயல்களை ஏற்கமுடியாது என்று ரோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்