21 பிள்ளைகளை பெற்ற பிரித்தானிய தாயார் அறிவித்த முக்கிய தகவல்: என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் என அறியப்படும் தம்பதி தங்களின் அடுத்த பிள்ளையை வரவேற்க காத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிறக்கவிருக்கும் குழந்தையுடன் சேர்த்து சூ மற்றும் நோயல் ராட்போர்டு தம்பதிக்கு 22 பிள்ளைகள் என கூறப்படுகிறது.

ஞாயிறன்று தங்களின் சமுக வலைதள பக்கத்தில் குறித்த தகவலை ராட்போர்டு தம்பதிகள் அறிவித்துள்ளனர்.

பிறக்கவிருக்கும் பிள்ளையை வரவேற்க தங்கள் குடும்பம் மிகவும் ஆவலாக இருப்பதாக அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூ ராட்போர்ட் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் அந்த காணொளியானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூ மற்றும் நோயல் தம்பதிகள் தங்கள் 21 பிள்ளைகளுடன் மோர்கேம்பே, லங்காஷயர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

(Image: Ken McKay/ITV/REX/Shutterstock)

4 மாடிகளுடன் 10 படுக்கை அறைகள் கொண்ட இந்த குடியிருப்பில் 21 பிள்ளைகளுடன் இவர் வசித்து வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதன் முறையாக நோயல் தம்பதி தொலைக்காட்சி ஒன்றால் பிரபலமானார்கள். அப்போது இவர்களுக்கு 15 பிள்ளைகள் இருந்தனர்.

தற்போது தங்களின் 22-வது பிள்ளையை வரவேற்க காத்திருக்கின்றனர். சூ மற்றும் நோயல் தம்பதிகள் தனியாக தொழில் செய்து வருவதால், அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் இதுவரை பெற்றுக்கொண்டதில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்