ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்.. பிரித்தானியாவில் நடந்த கொடூரம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் நள்ளிரவில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயமடைந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Milton Keynes, Emerson Valley பகுதியிலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கத்தியால் குத்திப்பட்ட 17 வயதுடைய சிறுவன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு சிறுவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும், விசாரணை குழுவும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது. அப்பகுதி முழுவதும் பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியளிக்கும் இரட்டை கொலை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கொலை தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் உடனே அணுகுமாறு பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்