அரச கடமைகளில் இருந்து விடுப்பு... வெளியானது இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் திட்டம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி-மேகன் தம்பதி அரச கடமைகளில் இருந்து சுமார் 6 வாரங்கள் விடுப்பு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்த அரச குடும்ப வட்டாரம் தெரிவித்த தகவலில், இளவரசர் ஹரி- மேகன் தம்பதி நவம்பர் மாதம் நடுப்பகுதி வரை முழு ஈடுபாடுகளையும் கடமைகளையும் கொண்டுள்ளனர்

அதன் பிறகு அவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சுமார் ஆறு வாரங்கள் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள்.

இந்த ஜோடி முதல் கிறிஸ்மஸை மே மாதம் பிறந்த தங்கள் மகன் ஆர்ச்சியுடன், ராணி மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் Norfolk-ல் உள்ள Sandringham-ல் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகனின் தாயார் Doria Ragland உடன் விடுமுறையை கழிக்க அவர்கள் அடுத்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பறப்பார்கள் என அரச குடும்ப வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்