பிரித்தானிய அரச குடும்பத்தினரின் சொத்துமதிப்பு வெளியானது: யார் முதலிடம் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களில் 1.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்களுடன் ராணியார் இரண்டாம் எலிசபெத் முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் இளவரசர் சார்லஸ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 100 மில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.

57 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாவது இடத்தில் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளார். நான்காவது இடத்தில் ராணியாரின் கணவரும் இளவரசருமான பிலிப் உள்ளார். இவரது சொத்துமதிப்பு 44 மில்லியன் பவுண்டுகள்.

தலா 30 மில்லியன் பவுண்டுகளுடன் 6-வது இடத்தில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி உள்ளனர்.

8 மில்லியன் பவுண்டுகளுடன் 8-வது இடத்தில் கேட் மிடில்டன் உள்ளார். 9-வது இடத்தில் 6 மில்லியன் பவுண்டுகளுடன் மேகன் மெர்க்கல் உள்ளார்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு ராணியார் அன்புப்பரிசாக அளித்த இல்லத்தில் சீரமைப்பு பணிகளுக்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்தே சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டது.

மட்டுமின்றி இளவரசர் வில்லியம், ஹரி ஆகியோரின் திருமண செலவுகளையும் அரசு கஜானாவில் இருந்து பொதுமக்கள் வரிப்பணத்திலேயே செலவிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட ஒரு தொகையை பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு சுமார் 7.9 மில்லியன் பவுண்டுகள் அரசு கஜானாவில் இருந்து பிரித்தானிய அரச குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது.

இந்த தொகையானது கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்டு தற்போது 82.8 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்