Brexit: போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்துக்கு மக்கள் பேராதரவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட் தொடர்பில் போரிஸ் ஜான்சன் முன்வைத்துள்ள ஒப்பந்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்துள்ள புதிய ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரது ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என பிரித்தானிய மக்கள் விரும்புவதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று நடத்திய இந்த ஆய்வில், 50 சதவிகிதம் பிரித்தானியர்கள் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த ஆய்வு போரிஸ் ஜான்சன் கட்சியினருக்கு மக்களிடையே ஒரு திடீர் ஆதரவு பெருகியுள்ளதை உறுதிசெய்துள்ளது.

47 சதவிகிதம் பேர் பிரதமரின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், 38 சதவிகிதத்தினர் அதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஆச்சரியத்திற்குரிய விதமாக, எதிர்க்கட்சியான லேபர் கட்சியினரிலேயே 29 சதவிகிதத்தினர் ஜான்சனின் ஒப்பந்தத்தை ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆய்வு, லேபர் கட்சி தலைவரான ஜெரமி கார்பினுக்கு கொஞ்சம் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், அவரது ஆதரவு வாக்காளர்களில் ஐந்தில் ஒருவரே, போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

அடுத்த தேர்தலில் யார் வெல்வார்கள் என்று கேட்கப்பட்டபோது, வெறும் 31 சதவிகித லேபர் கட்சி ஆதரவு வாக்காளர்கள் மட்டுமே கார்பினை தேர்வு செய்துள்ளார்கள்.

போரிஸ் ஜான்சனால் மட்டும் அக்டோபர் மதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளிக்கொணர முடிந்ததென்றால், அவருக்கு தற்போது இருக்கும் ஆதரவு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன் மாலையும் வெள்ளி அன்றும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1,025 பேர் ஒன்லைனில் பங்கேற்றார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers