விமானத்திலிருந்து விழுந்த ஒருவரின் உடல்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நைரோபியிலிருந்து ஹீத்ரோவுக்கு வந்துகொண்டிருந்த கென்யா ஏர்வேஸ் விமானம் ஒன்றிலிருந்து, லண்டனிலுள்ள வீட்டின் தோட்டத்தில் விழுந்த ஒருவரின்புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுளனர்.

தனது வீட்டு தோட்டத்தில் ஒருவர் சூரியக்குளியல் எடுத்துக்கொண்டிருந்தபோது, கீழே ஏதோ மோதிவிழும் சத்தம் கேட்ட மற்றொருவர், அது என்ன என்று பார்க்கும்போது, ஒருவரின் உடல் கிடப்பதையும் பக்கத்திலுள்ள சுவரில் இரத்தம் தெறித்திருப்பதையும் கண்டிருக்கிறார்.

பிரித்தானிய பொலிசார் அந்த உடலை மீட்டு சவக்கிடங்கில் வைத்துள்ளார்கள். அவர் வைத்திருந்ததாக கருதப்படும் பை ஒன்றும் விமானத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

Image: Met Police

அதில் கென்ய நாட்டு பணம் இருப்பதால், அவர் ஒரு கென்யராக இருக்கலாம், அவருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்ற ஊகங்களைத் தவிர, அவரை கண்டுபிடிப்பதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை.

கென்ய அரசுடன் இணைந்து நடத்திய விசாரணையிலும் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே கணினி மூலம் உருவாக்கப்பட்டுள்ள அந்த நபரின் புகைப்படம் ஒன்றையும், அவருடையது என நம்பப்படும் ஒரு பையின் படத்தையும் வெளியிட்டு அவரை அறிந்தவர்கள் யாராவது இருந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Image: Met Police

Image: SWNS

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்