உடல் முழுவதும் 83 காயங்கள்... இளைஞர்களால் அடித்தே கொல்லப்பட்ட பிரித்தானியர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் லானர்க்ஷயர் பகுதியில் காவலாளி ஒருவர் இளைஞர்கள் இருவரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கிளாஸ்கோ உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்காட் பியர்சன்(22) மற்றும் ரியான் ஹண்டர்(28) ஆகிய இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 49 வயதான Mohammed Abu Sammour என்பவரை குறித்த இளைஞர்கள் இருவரும் கொடூரமான முறையில் தாக்கியதுடன்,

அவரது வாகனத்தைப் பறித்து, அவர் மீதே மோதி சித்திரவதைக்கு உட்படுத்தி கொன்றுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பியர்சன் மீதான புகார் நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிளாஸ்கோ உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதே வழக்கில் சிக்கிய ஹண்டர் என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று பணியில் இருந்த முகமது அபுவின் வாகனத்தை பறித்த அந்த இருவரும், நகரத்தை ஒரு சுற்று சுற்றி வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த வாக்குவாத்தில், அந்த இருவரும் முகமது அபுவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த இருவரும் முகமது அபுவின் வாகனத்தாலையே மோதவிட்டு, அவரை சில மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் முகமது அபுவின் முகம் சிதைந்துள்ளது.

அவரது மண்டை ஓடு உடைந்துள்ளது. விலா எலும்புகளில் சில நொறுங்கியுள்ளது. உடல் முழுவதும் 83 காயங்கள் இருந்துள்ளன.

12 வயது முதலே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள பியர்சன், முகமது அபுவை கொலை செய்வதற்கும் 8 தினங்களுக்கு முன்னரே சிறையில் இருந்து வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட முகமது அபுவுக்கு ஃபிடா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்