இலங்கையில் மர்மமாக உயிரிழந்த விளையாட்டு வீரர்கள் வழக்கு: மேலதிக ஆதாரங்களை கேட்கும் பிரித்தானியா!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், மேலதிக ஆதாரங்களை பிரித்தானியா கேட்டுள்ளது.

கொழும்புவில் தங்கியிருந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களான Thomas Andrew Howard (25) மற்றும் Thomas Reed Baty (26) இருவரும் மே மாதம் 13ஆம் திகதி தங்கள் ஹொட்டல் அறையில் கடுமையான மூச்சுத்திணறலால் தவித்ததையடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் Howardம், செவ்வாயன்று மருத்துவமனையில் Batyயும் உயிரிழந்தனர்.

தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் ரக்பி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்காக இருவரும் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்தனர்.

விளையாட்டு ஒன்றைத் தொடர்ந்து இரவு விடுதி ஒன்றிற்கு இருவரும் சென்றிருந்ததாகவும், அதிகாலை 2, 3 மணியளவில் அவர்கள் தங்கள் அறைக்கு திரும்பியதாகவும் Durham மற்றும் Darlington Coroner நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டது.

இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில், பிரித்தானிய பொலிசார் மேலதிக ஆதாரங்களை இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் சாட்சியங்களின் அறிக்கைகள் CCTV கமெரா காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் பேட்டிகளின் transcriptகள் ஆகியவற்றை கோரியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers