பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் கத்தி குத்தில் பலி!... புகைப்படம் வெளியானது.

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியாவில் கத்திக் குத்தில் பலியான இளைஞர் இலங்கையை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில் வைத்து இரு இளைஞர்கள் கால்பந்து போட்டியை பார்க்க சென்ற நேரத்தில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கு வந்த நபர் இலங்கையை சேர்ந்த Tashan Daniel என்ற இளைஞரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் Tashan Daniel சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகனின் இழப்ப ஆழந்த துயரைத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலம், சில தினங்களுக்கு முன் 20வயதை எட்டிய Tashan Danielக்கு பிறந்தநாள் பரிசாக , கால்பந்தாட்ட போட்டி பார்ப்பதற்கான டிக்கெட் வழங்கியதாகவும், பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

image PA

பொலிசார் தரப்பில் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படுவோம் என்றும், மேலும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அரை காப்பாற்ற முயன்றும் இயலாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை சம்ப இடத்தில், ஆய்வு செய்த பொலிசார், பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளனர்.

image PA
image facebook

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers