லண்டனில் பட்டப்பகலில் பலர் முன் நடந்த எதிர்பாராத சம்பவம்... அதிர்ச்சியில் உறைந்து போன மக்களின் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நபர் ஒருவர் பரபரப்பு மிகுந்த தெருவில் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து ஏதோ பொருளை எடுக்க முயன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bromley-வில் இருக்கும் பரபரப்பு மிகுந்த வீதியில், பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த தெருவில் மக்கள் அனைவரும் வழக்கம் போல் சென்று கொண்டிருக்க, பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த நகைக்கடை அருகே இருந்த நபர் திடீரென்று சுத்தியலால், அந்த நகைக்கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியை உடைக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒரு பெண் அவரை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உடைந்த கண்ணாடி வழியே கையை விட்டு, கடிகாரம் போன்ற பொருளை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இது குறித்து சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், கடந்த 30 -ஆம் திகதி அந்த நபரை பொலிசார் அடையாளம் கண்டனர். அந்த நபரின் பெயர் Nathan Thamby என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அவர் வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிசார் கூறியுள்ளனர். அந்த நபர் எதற்காக இப்படி செய்தான் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, இருப்பினும் பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்