திவாலான தாமஸ் குக் நிறுவனம்... புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானியருக்கு ஏற்பட்ட சிக்கல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் தமது மனைவியுடன் கடைசியாக சுற்றுலா செல்ல ,முடிவு செய்த நிலையில், தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக வெளியான அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் டெர்பியில் குடியிருக்கும் Lyndsay மற்றும் Matt Dominic தம்பதி, தங்களில் கடைசி ஆசையாக Tenerife செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இவர்களின் இந்த சுற்றுலாவுக்காக 1,800 பவுண்டுகள் தொகையை நெருங்கிய நண்பர்கள் சிலர் சேகரித்து வழங்கியுள்ளனர்.

நாளை புறப்பட வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், தாமஸ் குக் விமான நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு வெளியானது.

இதனால் தங்களின் இந்த ஆசை நிறைவேறாமல் போனதாக வருத்தமுடன் தெரிவித்துள்ளனர். 43 வயதான Matt Dominic-கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கடந்த மே மாதம் உறுதியானது.

உயிர் தப்புவது கடினம் என தெரியவந்த நிலையில், கடைசியாக பிள்ளைகளை அழைத்துச் செல்லாமல் இருவரும் தனியாக சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.

நாளை புறப்பட்ட வேண்டும் என்பதால் பெட்டி முதற்கொண்டு அனைத்தும் தயாராக வைத்திருந்ததாக Lyndsay தெரிவித்துள்ளார்.

தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக தெரியவந்த பின்னர், பலமுறை அந்த நிறுவன வாடிக்கையாளர் உதவி சேவையை தொடர்பு கொள்ள முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது என்றார்.

மட்டுமின்றி தாமஸ் குக் நிறுவனத்தை நம்பியதால், வேறு திட்டம் எதுவும் எங்களுக்கு இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்னொரு சுற்றுலாவுக்கு பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவது மோசமான செயல் எனவும், Lyndsay குறிப்பிட்டுள்ளார்.

தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, முன் பதிவுகள் அனைத்தையும் ரத்து செய்து வருகிறது.

மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 150,000 சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் பொருட்டு 100 மில்லியன் பவுண்டுகள் செலவிட உள்ளது.

தற்போதைய சூழலில் தாமஸ் குக் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல 200 மில்லியன் பவுண்டுகள் தேவைப்படுவதாகவும், அந்த தொகையை திரட்ட முடியாமல் போனதே இந்த சூழலுக்கு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்