பிரித்தானியாவில் 6 வயது சிறார்களுக்கு பாலியல் உணர்வை தூண்டும் பாடத்திட்டம்: கொந்தளிக்கும் பெற்றோர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் 240 ஆரம்ப பாடசாலைகளில் 6 வயது சிறார்களுக்கு பாலியல் உணர்வை தூண்டும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக கூறி பெற்றோர்கள் பலர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் வார்விக்ஷயர் கவுண்டியில் செயல்பட்டுவரும் 240 ஆரம்ப பாடசாலைகளில் பாலியல் கல்வி தொடர்பில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதில் 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தங்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப்பார்ப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளதுடன்,

சிறார்களை அதற்கு முயற்சி செய்யவும் ஊக்குவிக்கும் வகையில் அந்த பாடத்திட்டம் அமைந்துள்ளது.

மேலும், பொதுவெளியில் சிறார்கள் தங்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப்பார்ப்பது கூடாது எனவும், அறையில் தனியாக இருக்கும்போதோ, குளிக்கும்போதோ, படுக்கையில் இருக்கும்போது முயற்சி செய்து கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வார்விக்ஷயர் கவுண்டியில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் இந்த பாலியல் கல்வியானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் துவக்கம் நாடு முழுவதும் அமுலுக்கு வர உள்ளது.

சிறார்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப்பார்ப்பது மோசமான செயல் அல்லது அருவருப்பானது என பெற்றோர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயமானது மிகவும் சாதரண நடவடிக்கை என அந்த பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தெரியவந்த பல பெற்றோர்கள், சிறார்களுக்கு இதுபோன்ற பாடத்திட்டங்களை இந்த வயதிலேயே அறிமுகம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வியல் நிபுணர்களும் ஆசிரியர்கள் சிலரும் தற்போது இந்த புதிய பாடத்திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்