பிரித்தானியா ரயில் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய மர்ம மனிதன்.. சந்தேகத்திற்குரிய பையால் தெறித்து ஓடிய மக்கள்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா விமான நிலைய ரயில் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய மர்ம நபர் மற்றும் மர்ம பையால் ஏற்பட்ட பீதியை அடுத்து அங்கிருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மான்செஸ்டரில் விமான நிலைய ரயில் நிலையத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்தில் நிர்வாணமாக சந்தேக நபர் சுற்றிதிரிந்ததாகவும், மரம் பை ஒன்றும் இருந்தாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மக்களை அப்பகுதியிலிருந்து பத்திரமாக வெளியேற்றி மரம் பையை கைப்பற்றி சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்ட தகவலின் படி, வெடிகுண்டு அகற்றும் அதிகாரிகள் குழு மான்செஸ்டர் விமான நிலைய ரயில் நிலையத்திற்கு விரைந்துள்ளது.

கைப்பற்றபட்ட பை பத்திரமாக உள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, அதே சமயம் பேருந்து மற்றும் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். எனினும், இச்சம்பவத்தால் விமான சேவை பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் நிர்வாணமாக ரயில் நிலையத்திற்கு முன் ஓடி திரிந்ததாக சம்பவயிடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்