பிரித்தானியாவில் இரத்த போக்கால அவதிப்பட்ட 18 வயது கர்ப்பிணி... ஸ்கேன் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரத்த போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி அங்கு பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட நிலையில் தனது குழந்தையை இழந்துள்ளார்.

எமி ரெனி (18) என்ற இளம்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. மீண்டும் 10 வாரம் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் போது எமிக்கு திடீரென இரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக Plymouth-ல் உள்ள ஒரு மருத்துவமனைக்கு எமி சென்றார்.

அங்குள்ள அவசர உதவி சிகிச்சை பிரிவில் அதிகளவில் கூட்டம் இருந்தது. முக்கியமாக போதை மருத்துகள் மற்றும் குடிக்கு அடிமையானவர்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

இதன் காரணமாக எமி 12 மணி நேரம் காத்திருந்தார். இதன் பின்னர் செவிலியர்களிடம் தனது சிறுநீர் மாதிரி மற்றும் இரத்த மாதிரியை எமி கொடுத்தார்.

இதன்பின்னர் இன்னும் சில மணி நேரம் கழித்தே அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது, அப்போதும் செவிலியர்கள் எமி வயிற்றில் குழந்தை இருப்பதாகவும் ஆனால் அதற்கு இதயத்துடிப்பு இல்லை என்றும் கூறினர்.

இதன்பின்னர் மருத்துவரை பார்த்த போது எமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது எமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறினார்.

இதை தாங்க முடியாமல் எமி கண்ணீர் விட்டார். அவர் கூறுகையில், மருத்துவமனையில் எனக்கு மிக மோசமான அனுபவம் ஏற்பட்டது.

என்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது, அந்த மருத்துவமனைக்கு சென்று சாப்பிடாமல், தூங்காமல் பல மணி நேரம் இருந்தேன். எனக்கு அதிகளவு இரத்த போக்கு இன்னும் உள்ளது என கூறியும் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

எனக்கு எதனால் கருச்சிதைவு ஏற்பட்டது என இன்னும் மருத்துவமனை நிர்வாகம் கூறவில்லை, இதில் என் தவறு இல்லை என்றாலும் அதை என் மனம் ஏற்க மறுக்கிறது என கூறியுள்ளார்.

எமி அதிக நேரம் மருத்துவமனையில் காத்திருந்தது தான் அவர் கருச்சிதைவுக்கு காரணமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இது குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எமிக்கு நேர்ந்த இழப்பு வருத்தமளிக்கிறது.

எங்களின் ஆலோசனை தொடர்பு சேவை மையத்தை எமி மற்றும் குடும்பத்தார் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்