பிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த ஐவரும் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் 2017 செப்டம்பர் முதல் 2018 செப்டம்பர் வரையான காலகட்டத்தில் மரணமடைந்த 4 பெண்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையானது நாட்டில் தீவிரமடைந்துவரும் பசியின்மை நெருக்கடி குறித்து அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த Averil Hart என்ற இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பசியின்மை நோயினால் அவதிப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் Cambridge மற்றும் Peterborough NHS Foundation Trust வழியாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

தற்போது 2017 மற்றும் 2018 காலகட்டத்தில் மரணமடைந்த 4 பெண்களும், இதே கோளாறினால் மரணமடைந்ததும், அவர்களும் NHS அறக்கட்டளை சார்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளதும்,

ஆனால் மருத்துவர்களால் உண்மையான பாதிப்பு என்ன என்பதை கண்டறிய தாமதமானதே இவர்கள் ஐவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என விசாரணையில் கூறப்படுகிறது.

Averil Hart இறந்தபோது இந்த விவகாரம் தொடர்பில் இருந்த சேவை எப்படி இருந்ததோ அதுபோலவே தற்போதும் இருப்பதாக அவரது குடும்பத்தினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஆனால் பசியின்மை நோய்க்கான சிகிச்சை வழங்க தேவையான சிறப்பு மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமின்றி பிரித்தானியாவில் பசியின்மை பாதிப்பை கண்டறியவும் எதிர்கொள்ளவும் தேவையான அமைப்பு ரீதியான தோல்வியே அந்த 5 இளம் பெண்களின் மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்