1,50,000 பிரித்தானியர்களின் கதி.. 21,000 பேர் வேலை இழப்பு: உலகளவில் பழமையான பிரித்தானிய நிறுவனம் மூடல்

Report Print Basu in பிரித்தானியா

உலகின் பழமையான பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாம்ஸ் குக் திங்களன்று திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

178 ஆண்டு பழமையான நிறுவனத்தை சரிவிலிருந்து காப்பாற்ற தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 200 மில்லியன் டொலர் கோரியுள்ளனர்.

இதுகுறித்து தாமஸ் குக் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிறுவனத்தை மீட்க்க கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும், பங்குதாரர்களுக்கும் புதிய பண வழங்குநர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏட்டப்படவில்லை.

எனவே நிறுவனத்தின் தலைமை ஆணையம், உடனடியாக நிறுவனத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியா நிறுவனமான தாமஸ் குக்கின் மிகப்பெரிய பங்குதாரரான சீனாவின் ஃபோசுன் குழு, நிறுவனத்தை திவால்நிலையிலிருந்து காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தது தொடர்பில் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியது.

உலகளவில் பழமையான நிறுவனம் திவாலாகிவிட்டதால், உலகளவில் 21,000 ஊழியர்களில் 9,000 பிரித்தானியர்கள் இப்போது தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

இதனையடுத்து, நிறுவனத்தின் அனைத்து விமான பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தாமஸ் குக் விமானத்தில் நாடு திரும்ப திட்டமிட்டு இருந்த சுமார் 1,50,000 பிரித்தானியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிறுவனம் திவாலான நிலையில், பிரித்தானியாவில் சிவில் ஏவியேஷன் ஆணையமும், அரசாங்கமும் தாமஸ் கூக் பயணிகளை புதிய விமானங்கள் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியாவில் இருந்த தாமஸ் குக் விமானத்தின் மூலம் பயணிக்க திட்டமிட்டிருந்த பயணிகள், வீட்டிலே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியா லட்சகணக்கான மக்களை மீட்க்க திட்டமிடுவதால், அமைச்சர்கள் சுமார் 40 பெரிய விமானங்களை இப்பணியில் ஈடுபடுத்த உள்ளதாக பட்டியலிட்டுள்ளனர்.

இப்போது உலகெங்கிலும் உள்ள ரிசார்ட்டுகளில் சிக்கித் தவிக்கும் நிறுவனத்தின் 400,000 வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலர் ரிசார்ட் நிர்வாகத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்