மொடல் அழகி ஒருவரது வீட்டுக்கு அடிக்கடி சென்றதாக பிரித்தானிய பிரதமர் மீது குற்றச்சாட்டு: பிரித்தானியாவில் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

திருமணமாகி இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வரும்போதே, ஒரு அழகியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக பிரித்தானிய பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தான் குற்றமற்றவன் என அவர் நிரூபிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால் பிரித்தானிய அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

2008 முதல் 2016வரை லண்டன் மேயராக இருந்த போரிஸ் ஜான்சன், தனது பரபரப்பான மேயர் பணிகளின் மத்தியிலும் கிழக்கு லண்டனிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்று வந்துள்ளார்.

அங்கு தனது 20களில் இருந்த ஒரு பெண் வசித்து வந்திருக்கிறார். அவரது பெயர் Jennifer Marie Arcuri. அமெரிக்காவைச் சேர்ந்த Arcuri, மொடலாக இருந்தவர்.

நடிப்பு, படத்தயாரிப்பு, ரேடியோ ஜாக்கி என பல வேலைகளை முயன்று எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட தோல்வியுற்று, சூஷி உணவகம் ஒன்றில் மேலாளராக வேலை செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார் Arcuri.

கடைசி முயற்சியாக, தனக்கு 26 வயதிருக்கும்போது, பிரித்தானியாவுக்கு செல்வது என முடிவு செய்திருக்கிறார் Arcuri.

அப்படி வந்த ஒரு இளம்பெண், அப்போதைய மேயரின் நெருங்கிய தோழியாகியதோடு, மேயர் அரசு பணத்தை அவருக்காக செலவிட்டது எப்படி என தற்போது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

2012ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சனின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னார்வலராக பங்கேற்றிருக்கிறார் Arcuri. அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மேயரான பின்னும் தவறாமல் தனது சைக்கிளில் Arcuriயின் வீட்டுக்கு சென்றுவிடுவாராம் ஜான்சன்.

அந்த வீட்டின் உரிமையாளர், ஜான்சன் தனது வீட்டுக்கு வருவதுண்டு என்றும் அவர் தனது சிறந்த நண்பர்களில் ஒருவர் என்று கூறும் அளவுக்கு, அவரது வீட்டில் வசித்த Arcuriயை சந்திக்க சென்றிருக்கிறார் ஜான்சன்.

அப்படி அவரை சந்திக்க இயலாத நேரங்களில் மிக நீண்ட நேரம், இருவரும் குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொள்வதுண்டு என அவரது நண்பர்களில், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.

தான் தன் வீட்டிலேயே நடத்தி வந்த அலுவலகம் ஒன்றில், கூட்டங்களில் உரையாட ஜான்சனை அழைத்துள்ளார் Arcuri.

சில நேரங்களில் Arcuriயை ஜான்சன் தனது மேயர் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பேஸ்புக்கில் தனது அன்றாட நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடைய Arcuri, ஜான்சனின் மேயர் இருக்கையில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அத்துடன் வரிப்பணத்தில் 126,000 பவுண்டுகள் அவருக்காக முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதோடு, ஜான்சனின் வெளிநாட்டுப்பயணங்களின்போது மூன்று முறை மக்கள் வரிப்பணத்தில் Arcuri ஜான்சனுடன் சென்றிருக்கிறார்.

நேற்றிரவு ஜெரமி கார்பன் இந்த குற்றச்சாட்டு குறித்து ஜான்சன் விளக்கமளிக்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ள நிலையில், Jo Swinson மற்றும் Jon Trickett ஆகியோரும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதற்கிடையில் தற்போது Arcuri திருமணமாகி Hickey என்பவருடன் அமெரிக்காவில் வசித்துவரும் நிலையில், என் மனைவியைப் பற்றிய ஆராய்ச்சியை விட்டு விட்டு, அவர்கள் அரசியலை கவனித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ள Arcuriயின் கணவர், இப்போதாவது அவர்களிடம் பிரெக்சிட்டுக்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா என கேட்டு நையாண்டி செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்