தமிழரை காதலித்து கரம் பிடித்த பிரித்தானிய பெண்! அவர் வெளியிட்ட வீடியோ... குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

தமிழரை திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய பெண் தமிழில் பாடி அசத்திய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த சமந்தா ரேயான் என்ற பெண் தமிழகத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

சமந்தாவுக்கு தமிழ்மொழி மீது தீராத காதல் ஏற்பட்ட நிலையில், தமிழை மும்முரமாக கற்று வருகிறார்.

இந்த சூழலில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத என்ற பாடலை சமந்தா தனது குரலில் அழகாக பாடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில், தமிழ் மொழியை ஆர்வமாக கற்று வரும் அவருக்கு டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்