இலங்கை இளைஞனின் தற்கொலை முடிவு... என்ன காரணம்? அவரே சொன்ன உருக்கமான தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கையில் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற இளைஞன் இன்று உயிரோடு இருப்பது அவருடைய அதிர்ஷ்டமே, இதற்கு காரணம் இலங்கை-பிரித்தானியா கூட்டு திட்டமே என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் அதாவது செப்டம்பர் 10-ஆம் திகதி சர்வதேச தற்கொலை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வருடத்துக்கு 8,00,000 பேர் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது.

தூக்கு போட்டு கொள்வது, விஷம் அருந்துவது, தீயிட்டு கொளுத்தி கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறன. இதில் 150,000 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த Pushpakumara என்பவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் இலங்கை-பிரித்தானியா கூட்டுத் திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 93,000 பேர் இலங்கையில் தற்போது உயிரோடு உள்ளனர்.

அதில் Pushpakumara-வும் ஒருவர். தற்போது 24 வயதாகும் இவர் இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவரின் மாத வருமானம் குடும்பத்திற்கே போதுமான அளவில் இருந்துள்ளது.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இரவு நேரங்களில் யானைகள் வயல்களுக்குள் புகுந்து நாசமாக்கிவிடும், அதிலிருந்து காப்பாது என்னுடைய வேலையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தின் வறுகையை காரணம் காட்டி திருமணம் செய்யவிருந்த பெண், என்னை விலகிச் சென்றுவிட்டார், இதனால் மிகுந்த வேதனையில் இருந்த நான் நான் பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்