பிரித்தானியாவில் பள்ளிக்கூடத்துக்கு குட்டையான உடையணிந்து சென்ற மாணவி... அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் குட்டையான சீருடை அணிந்த மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இது நியாயம் கிடையாது என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

Nottinghamshire உள்ள George Spencer Academy-ல் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பள்ளிக்கு வந்தார்.

ஆனால் அவர் வகுப்பறையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இதற்கு காரணம் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த சீருடை அவர் ஷூ வரை வராமல் குட்டையாக இருந்தது. இது பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார்.

குறித்த பள்ளியில் சீருடை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் மாணவி அதை பின்பற்றவில்லை என தெரிகிறது.

இது குறித்து அதிருப்தி தெரிவித்த மாணவியின் தந்தை, மாணவி குட்டையாக உடையணிந்தால் அதற்கு மாணவியின் பெற்றோருக்கு தண்டனை தரவேண்டுமே தவிர மாணவிக்கு தரக்கூடாது.

அவர்கள் வேண்டுமென்றே இது போல உடையணிவதில்லை என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்