அடிக்கடி கழிவறைக்கு சென்ற இளம்பெண்ணை சந்தேகித்த மதுபான விடுதி பாதுகாவலர்கள்: தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த இளம்பெண் ஒருவர், அடிக்கடி கழிவறைக்கு செல்வதைக் கண்ட மதுபான விடுதி பாதுகாவலர்கள், அவரைப் பிடித்து மோசமான கேள்விகள் கேட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவியான Amber Davies (21), Birminghamஇலுள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அவர் அடிக்கடி கழிவறைக்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகம் அடைந்த விடுதியின் பாதுகாவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி, போதைப்பொருள் உட்கொள்வதற்காக அடிக்கடி கழிவறைக்கு செல்கிறாயா? அல்லது யாருடனாவது பாலுறவு கொள்ளச் செல்கிறாயா என்று கேட்டுள்ளார்கள்.

அவருடன் வந்த அவரது காதலரையும் தனியாக அழைத்து விசாரித்துள்ளார்கள் அந்த பாதுகாவலர்கள்.

பின்னர்தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது. மொடலான Amberக்கு ஒரு பெரும் பிரச்னை!

அதாவது, குடலில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினை காரணமாக, Amber உடலில் உருவாகும் கழிவுப்பொருட்களை அவரால் இயற்கையாக வெளியேற்ற முடியாது.

அவை, அவர் அடிவயிற்றில் பொருத்தியுள்ள ஒரு பைக்குள் சேரும். ஒரு நாளைக்கு 5 முறையாவது அவர் கழிவறைக்கு சென்று அந்த பையை சுத்தம் செய்து வரவேண்டும்.

அப்படி சுத்தம் செய்யப்போகும்போதுதான், விடுதியின் பாதுகாவலர்கள் அவருடன் அவரது காதலரும் உதவிக்காக உடன் செல்வதைக் கண்டு, இருவரும் பாலுறவு கொள்வதற்காக அடிக்கடி செல்வதாக தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

உண்மை தெரியவரவும், மதுபான விடுதி சார்பில் Amberஇடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்