பிரித்தானியாவில் மிகவும் மோசமான விமானநிலையம் இது தான்... என்ன காரணம்? வெளியான பட்டியல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் மிகவும் மோசமான விமானநிலையம் குறித்து பயணிகளிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் போக்குவரத்தை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பாக பார்க்கப்பட்டு வருவது என்றால், அது விமானநிலையமாகத் தான் இருக்கும்.

சமீபத்தில் கூட நடிகர் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் லண்டன் விமானநிலையத்தில் தொலைந்து போனது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் Which? Travel நிறுவனம் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளிடம், குறிப்பாக பிரித்தானியாவில் உங்களுக்கு எது சிறந்த விமானநிலையமாக இருக்கிறது என்பது குறித்து கருத்து கேட்டுள்ளது.

இதில் 4,499 பயணிகளிடம் அவர்கள் மேற்கொண்ட விமானநிலைய அனுபவங்களை வைத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் விமானநிலையத்தில் இருக்கும் இருக்கைகள், அது அனைவருக்கும் போதுமான அளவில் இருக்கிறதா? போதவில்லையா? கழிப்பறை வசதிகள், தங்களுடைய பொருட்களை மீட்டெடுப்பது, அங்கிருக்கும் ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம், விமானநிலையத்தில் விற்கப்படும் உணவுகளின் விலை, பாஸ்போர்ட் சரிபார்த்தல் போன்ற காரணங்கள் கேட்ட அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பெரிய விமானநிலையத்திற்கு மக்கள் அளித்திருக்கும் சதவீதம்

London Heathrow Terminal 5 - 66 சதவீதம்

Birmingham - 65 சதவீதம்

London Heathrow Terminal 2 - 64 சதவீதம்

பிரித்தானியாவின் பெரிய விமானநிலையங்கள் மோசமானவைக்கு மக்கள் அளித்திருக்கும் சதவீதம்

London Stansted - 49 சதவீதம்

Manchester Terminal 3 - 47 சதவீதம்

London Luton - 43 சதவீதம்

சிறந்த சிறிய விமானநிலையங்கள்

Doncaster Sheffield - 86 சதவீதம்

London Southend - 79 சதவீதம்

Southampton - 77 சதவீதம்

மோசமான சிறிய விமானநிலையங்கள்

Leeds Bradford - 53 சதவீதம்

Aberdeen - 50 சதவீதம்

Belfast International - 42 சதவீதம்


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்