பிறந்த பத்தும் ஆண் பிள்ளைகள்.... நீண்ட 15 ஆண்டுகள் காத்திருந்த பிரித்தானிய தம்பதி: இறுதியில் கிடைத்த பரிசு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் அலெக்சிஸ் பிரட் என்ற பெண்மணியின் ஆண் பிள்ளைகளுக்கான அரண்மனையில் நீண்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த குட்டி இளவரசி பிறந்த தகவலை பூரிப்புடன் பகிர்ந்து வருகிறார் அவர்.

பிரித்தானியாவின் ரோஸ்-ஷைர் பகுதியில் குடியிருந்து வரும் டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதிகளுக்கு நீண்ட 15 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் பெண் பிள்ளை ஒன்று பிறந்துள்ளது.

அதுவும் 10 சகோதரர்களின் ஒரே ஒரு சகோதரியாக பிறக்கும் அபூர்வ அதிர்ஷ்டம் இந்த குழந்தைக்கு வாய்த்துள்ளது.

தமது 22 ஆம் வயதில் அலெக்சிஸ் முதன் முறையாக ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார். இரண்டாவதும் மூன்றாவதும் ஆண் பிள்ளைகள் பிறந்த நிலையில் தங்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என இருவரும் ஆசைப்பட்டுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து 10 ஆண் பிள்ளைகள் பிறந்த பின்னரும் டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதிகளின் பெண் பிள்ளைக்கான ஆசை மட்டும் குறையவே இல்லை.

இறுதியில் 11-வது பிறந்த பிள்ளை பெண்ணாக அமைந்துள்ளது. தற்போது குடும்பகட்டுப்பாடு செய்து கொள்ள முடிவெடுத்துள்ள அலெக்சிஸ்,

மருத்துவர்கள் தமக்கு பிறந்தது பெண் பிள்ளை என தெரிவித்த அந்த நொடி, படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து கொண்டாட நினைத்ததாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அலெக்சிஸ் தமது பெற்றோருக்கு ஒரே மகள். இதனாலையே அதிக பிள்ளைகள் கொண்ட ஒரு பெரிய குடும்பம் தமக்கு வேண்டும் என ஆசைப்பட்டு வந்துள்ளார்.

பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தாலும், தமக்கு பிறந்த அனைத்து பிள்ளைகளையும் தாம் ஒரே போன்றே கருதுவதாகவும், அதில் வேறுபாடு காட்டுவது உண்மையான பெற்றோருக்கு அழகல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்