மனைவியை படுக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி கணவன் செய்த மோசமான செயல்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவியை படுக்கையில் படுக்க வைத்து கண்களை மூட சொன்ன கணவன் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசளிப்பார் என நினைத்த நிலையில் மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Royal Tunbridge Wells நகரை சேர்ந்தவர் ஷான் மே (34). இவர் மனைவி லவுரா.

தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதி வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தார் ஷான்.

பின்னர் மனைவி லவுராவுடன் உறவு கொண்டார். இதையடுத்து லவுராவை படுக்கையில் படுக்க கூறிய ஷான் கண்களை இறுக மூடி கொள்ள சொன்னார்.

இதற்கு பின்னர் பத்து, ஒன்பது என கவுண்டவுன் எண்ணினார்.

இதனால் தனக்கு கணவர் ஷான் ஏதோ சர்ப்பரைஸ் பரிசை கொடுப்பார் என லவுரா மகிழ்ச்சியோடு காத்திருந்தார்.

ஆனால் அவர் எண்ணி முடித்தவுடன் கத்தியை எடுத்து வேகமாக மனைவி கழுத்தில் குத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத லவுரா அதிர்ச்சியடைந்தார்.

ஷான் கத்தியால் குத்தும் போது கத்தியின் கைப்படி உடைந்ததால் பலமாக உள்ளே இறங்கவில்லை.

இதையடுத்து ஷானே மனைவியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

அங்கு மனைவிக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போது கணவர் தன்னை கத்தியால் குத்தினார் என லவுரா சொல்லாமல் தானே குத்தி கொண்டதாக கூறினார்.

ஆனால் பொலிசார் நடத்திய விசாரணையில் ஷான் தான் லவுராவை கத்தியால் குத்தினார் என தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.

ஷான் மீதான நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது, நேற்று நடந்த விசாரணையில், வழக்கறிஞர் கூறுகையில், மனைவியை கத்தியால் குத்திவிட்டு அவரிடம் என்னை மன்னித்து விடு, நான் என்னையே கத்தியால் குத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன், ஆனால் தவறுதலாக உன்னை குத்திவிட்டேன்.

நமது சொத்து அடமானத்தில் வந்துவிட்டதோடு கடனும் உள்ளது அதனால் தான் தற்கொலை செய்ய நினைத்தேன் என கூறினார்.

இது குறித்து பேசிய நீதிபதி, இந்த வழக்கில் ஷான் தனது மனைவியை கொலை செய்ய முயன்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் குற்றவாளி என்பதும் உறுதியாகியுள்ளது, அவருக்கான தண்டனை விபரம் அக்டோபர் மாதம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்