தமிழர்களை சென்னையில் நெகிழ்ச்சியடைய செய்த பிரித்தானியர்! வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா துணை உயர் ஆணையர்சென்னையில் பிரித்தானிய துணை உயர் ஆணையராக இருந்த ஜெரிமி பில்போர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையை அதிகம் மிஸ் செய்வதாக உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னையில் பிரித்தானிய துணை உயர் ஆணையராக இருந்தவர் ஜெரிமி பில்மோர் பெட்போர்ட்.

இவர் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜெரிமி தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையை விட்டு பெங்களூக்கு பணிக்கு செல்வதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு அழகான நினைவலைகள் சென்னையில் உண்டு, சென்னையில் பல விடயங்களை நான் மிஸ் செய்வேன். இது குறித்து அடுத்த 12 நாட்கள் டுவீட் செய்வேன் என கூறினார்.

அதன்படி சென்னையில் உள்ள பிரபல கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புகைப்படங்களை பதிவிட்ட ஜெரிமி வரலாற்று சிறப்புமிக்க இந்த அழகான வழிபாட்டு தளங்களை மிஸ் செய்வதாக தெரிவித்தார்.

மற்றொரு பதிவில், தமிழ் உணவுகள் மற்றும் பானங்கள் என பதிவிட்டு மசால் தோசை, வடை, காபி போன்ற புகைப்படங்களை போட்டு அதை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்.

இதே போல தினமும் தான் சென்னையில் மிஸ் செய்யும் விடயங்களை பதிவிட்டு வருகிறார்.

அவரின் இந்த பதிவு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ள நிலை பதில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருவர் கூறுகையில், சந்தேகமே இல்லை! தமிழ் உணவுகள் மற்றும் கலாச்சாரம் அருமையானவை என கூறியுள்ளார்.

மீண்டும் சென்னைக்கு வாருங்கள் என இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் அழகாக உள்ளது என மற்றொருவர் தெரிவித்துள்ளார். இப்படி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்