இங்கே உனக்கென்ன வேலை?: பிரித்தானிய பிரதமரை நடுரோட்டில் கேள்வி கேட்ட நபர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை நடுரோட்டில் மடக்கி கேள்வி கேட்டார் ஒரு நபர்!

லீட்ஸ் என்ற நகரில் பிரசாரத்திற்காக சென்றிருந்த போரிஸ் ஜான்சனை நடு ரோட்டில் மடக்கிய ஒருவர், நீங்கள் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை, நீங்கள் இங்கே லீட்ஸில் இருக்கிறீர்கள் என்று கத்தினார்.

அதற்கு ஜான்சன், நான் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன் என்று தன் நிலையை விளக்க முயன்றார்.

ஆனால் அவரை பேச விடாத அந்த நபர், மீண்டும், இல்லை நீங்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை, விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மறுபடியும் சத்தமிட்டார்.

அதற்கு ஜான்சன், மக்கள் நாம் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

அப்படியும் அந்த நபர் விட்டபாடில்லை, தொடர்ந்து சத்தமிட ஆரம்பித்தார். இது லீட்ஸில் மட்டும் அல்ல, ஜான்சன் மற்றொரு நகருக்கு செல்லும்போது, அவரிடம் கை குலுக்கிய ஒரு நபர், அவரது முதுகைத் தட்டி, அவரிடம் மெதுவாக, தயவு செய்து எங்கள் நகரை விட்டு வெளியேறுங்கள் என்று கூற, ஜான்சனும், சீக்கிரம் வெளியேறி விடுகிறேன் என்று கூறுகிறார்.

ஒரு பக்கம் ஜான்சனின் சொந்த சகோதரரே அவரை கைவிட்டு ராஜினாமா செய்ய, மறுபக்கம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மொத்தத்தில் நேற்றைய தினம் பிரித்தானிய பிரதமரின் அரசியல் வாழ்வில் மோசமான ஒரு நாளாகத்தான் அமைந்தது என்றே கூறவேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்