பிரித்தானியாவில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த நிலை.. ஒரே பாட்டிலில் மொத்த பணத்தையும் இழந்து ஆண்டியானார்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா ஹோட்டலில் பீர் குடித்ததின் மூலம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர். வைத்திருந்த மொத்த பணத்தையும் இழந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரை குறித்து எழுத பிரித்தானியாவுக்கு வருகை தந்த Peter Lalor என்ற நபரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் நகரில் Malmaison ஹோட்டல் bar-க்கு சென்ற Peter, bar ஊழியரிடம் ஏதேனும் பீர் ஒன்றை குடிக்க கேட்டுள்ளார்.

bar ஊழியர் எதர்ச்சியாக Deuchars IPA என்ற பீரை Peter-ருக்கு வழங்க அவரும் அதை திறந்து குடித்துள்ளார். பின்னர், அதற்கான பணத்தை தனது வங்கி கார்டு மூலம் பீட்டர் செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய பின், பீருக்கான விலை குறித்து கேட்க பில்லை கண்டு ஊழியரே அதிர்ச்சியடைந்துள்ளார். Deuchars IPA ஒரு பீருக்கு 55,000 பவுண்ட் வசூலிக்கப்பட்டள்ளது.

(Image: PA)

Deuchars IPA உலகிலே மிகவும் விலை உயர்ந்த பீர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த Peter, இதை சரி செய்யும் படி ஊழியரிடம் கோரியுள்ளார்.

(Image: PA)

உடனே அங்கு வந்நத bar மேலாளர், சம்பவம் குறித்த விசாரித்த பின் பணத்தை திரும்ப அளிப்பதாக Peter-ருக்கு உறுதியளித்துள்ளார். தன் வங்கியில் வைத்திருந்து மொத்த பணத்தையும் இழந்துவிட்டதாக Peter தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்