அரச ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த மேகன் செய்த நெகிழ்ச்சி காரியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி அட்டைகள் அனுப்பி இளவரசி மேகன் ஆச்சர்யம் கொடுத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி மேகனின் 38வது பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு 14ம் திகதியன்று கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அரச ரசிகர்கள் பலரும் மேகனுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் நன்றி அட்டையினை அனுப்பி வைத்து மேகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தாலும், அந்த அட்டைகள் அனைத்துமே கென்சிங்டன் அரண்மனை உறைகளில் வந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்டைகளில் பயன்படுத்தப்படும் புகைப்படம் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் டோங்கா ஆகிய 16 நாள் சுற்றுப்பயணத்தின் போது அக்டோபர் 2018 இல் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்