போதை இறங்கிவிட்டதாக நினைத்து இளம் பெண் செய்த காரியம்: சிக்கவைத்த உடன் குடித்த நண்பர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் போதையில் கார் ஓட்டிய பெண்ணை நண்பரே பொலிசில் மாட்டிவிட்டு சிக்கவைத்துள்ளார்.

Lincs பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான 26 வயதுடைய Ashley Hendrie என்ற பெண்ணே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று விடிய விடிய காலை 3 மணிவரை Ashley Hendrie நண்பருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். மறுநாள் எழுந்த அவர் காலையில் டாக்சியில் வெளியே சென்றுள்ளார். பிற்பகலில் போதை தெளிந்து விட்டதாக கருதிய Hendrie, தனே காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

இதைஅறிந்த, அவருடன் குடித்த நண்பர், Hendrie போதையில் கார் ஓட்டுவது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே Lincs பகுதியில் உள்ள Hendrie வீட்டிற்கு விரைந்த பொலிசார், அவர் வீடு திரும்பிய உடன் கைது செய்துள்ளனர்.

 Ashley Hendrie was fined £250 after admitting drink-driving

இதனையடுத்து அவருக்கு நடந்த சோதனையில் சட்டப்படி 35mcg இருக்க வேண்டிய மது அளவு 85mcg இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Hendrie, மதுபோதையில் காரை இயக்கியதாக குற்றதை ஒப்புக்கொண்டார்.

Hendrie-க்கு 250 டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம், 20 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதித்துள்ளது. மேலும், 85 டாலர் செலவுகள் மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 30 டாலர் கூடுதல் கட்டணத்தையும் செலுத்த உத்தரவிடப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்